Thursday, May 11, 2006

எங்கும் Thamizh, Edhilum தமிழ், பொங்கும் தமிழ், Nam தங்கத் தமிழ்!

எனது உயிரினும் மேலான தமிழ்த்தாயை வணங்கி, எனது முதல் தமிழ்ப் பதிப்பைத் துவங்குகின்றேன்.
=
ஒளவையாரைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவை இல்லை. அவர் புகழ் இவ்வையகம் இருக்கும் வரை நிலைக்கும். =
தமது ஒவ்வொரு செயலிலும் சான்றோர் சிறந்து விளங்குவர் என்பதற்க்கு ஒளவையார் ஒரு எடுத்துக்காட்டு.
=
ஒரு முரை,தம்மை இழிவாகப் பேசிய ஒருவனை ஒளவையார் கண்டிக்கின்றார்... (இருப்பினும் சான்றோராகவே....)
=
"எட்டேகால் லட்சணமே
எமனேரும் வாகனமே
கூரையில்லா வீடே
குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய்!"
=
இது சான்றோர் வாக்கல்லவா? எளிமையானச் சொற்க்களில் கூட ஒரு இனிமை ஒளிந்திருக்கும்.
=
எனதருமைச் செல்வங்களே!
=
வாருங்கள். நாம் அவர்தம் சொர்க்களை ஆரய்ந்து தமிழின் இனிமையைச் சுவைப்போம்.
=
விளக்கம்:
எண்களுக்குத் தமிழில் குறிப்புகள் உண்டு.
=
எட்டு (8) = அ
கால் (1/4)= வ
=
எட்டே கால் = 8 1/4= அவ
=
எட்டே கால் லட்சணமே = அவ லட்சணமே!!
=
எமனேரும் வாகனம் எது? - எருமை!
=
கூரையில்லா வீடு எது? - குட்டிச்சுவர்!
=
குலராமன் தூதுவன் யார்? - குறங்கு! (அனுமன்)
=
ஆரைக்கீரை - ஒரு வகையான கீரை...
=
ஆரையடா சொன்னாய் - என்பதற்க்கும் இரு அர்த்தங்கள் உண்டு.
=
1. யாரை அடா சொன்னாய்? (என்னையா?)
2. ஆரை அடா சொன்னாய்? (நீ ஆரைக் கீரையைத்தானே சொன்னாய்?)
=
:-)
=
ஆகவே - என் கண்மணிகளே!
=
நாமும் சான்றோர்களாகவே விளங்கவேண்டும்.நாவைக் காத்து, நமது தன்மானத்தையும் காக்க வேண்டும்.
=
வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.
=
[மக்களுக்கோர் வேண்டுகோள்: பல வருடஙளுக்குப் பிறகு நான் தமிழ் மொழியில் மீண்டும் எழுதுகின்றேன். சொற்சுவையில் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும். பொருட்சுவையில் பிழை இருந்தால், குற்றம்! குற்றமே!! என்று கீரனாக எமக்குப் விளங்க வைக்க வேண்டும்.
= பின்குரிப்பு: நான் அணிந்திருக்கும் கண்ணாடியைச் சேர்த்து, எமக்கு நான்கு கண்கள் உள்ளன! ]

This page is powered by Blogger. Isn't yours?